ஏமனில் அதிபர் மன்சூர் ஹாடி தலைமையிலான அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பல வருடங்களாக தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் அந்த அமைப்பிற்கு ஈரான் அரசின் ஆதரவும் உள்ளதால் அவர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்கள் மீது உள்நாட்டு அரசுப் படைகளும் அண்டை நாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகளும் தொடர் தாக்குதல் நடத்திவருகின்றன.
இந்நிலையில் ஏமன் நாட்டின் மாரீப் மாகாணத்திலுள்ள அல்-மிலா பகுதியில் ஏமன் ராணுவக் குடியிருப்புகள் மீது கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வகையைச் சேர்ந்த ஏவுகணை தாக்குதல் நேற்று அரங்கேறிவுள்ளது. இத்தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பாட்டோர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்கவில்லை.