Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…. 117 பேர் குணமடைந்துள்ளனர்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் 117 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1,211 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே நாளில் 117 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்க்ளின் எண்ணிக்கையானது 10,815ஆக அதிகரித்துள்ளது. இதில் 9272 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1190 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 353ஆக உயர்ந்துள்ளது.

37 லட்சம் ரேபிட் கிட் கருவிகள் விரைவில் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கிறோம். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தொழிலாளர்களின் பிரச்சினைகளை களைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பான குறைகளைத் தீர்க்க 20 கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த தொழிலாளர்கள் 96771 12646 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |