நைஜீரியாவில் நேற்று மர்ம கும்பல் ஒன்று நடத்திய பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியாவில் ஆள் கடத்தலும், பயங்கரவாத தாக்குதலும் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் நைஜீரியாவின் சகோடா மாகாணத்தில் உள்ள கொரன்யா கிராமத்தில் நேற்று பயங்கரமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சகோடா மாகாண அரசு அந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. அதேபோல் நேற்றுமுன்தினம் மர்ம கும்பல் ஒன்று சந்தை பகுதியை பயங்கரமாக அடித்து நொறுக்கியுள்ளது. மேலும் 30 பேரை பயங்கரமாக சுட்டு கொன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.