Categories
உலக செய்திகள்

திக்.. திக்.. “43 உயிர்களை காவு வாங்கிய எரிமலை”…. வெளியான பகீர் தகவல்….!!

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலையால் காயமடைந்தவர்கள் தற்போது உயிரிழந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 4-ஆம் தேதி இந்தோனேசியாவில் 3,676 மீட்டர் உயரமுடைய செமேரு எரிமலையிலிருந்து புகை வெளிவந்துள்ளது. அதன் பிறகு திடீரென வெடித்த அந்த எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் புகையானது வான்வரை பரவி காற்றில் கலந்துள்ளது. இந்த சம்பவத்தில் எரிமலையின் அருகிலிருந்த வீடுகளும், பாலம் ஒன்றும் பயங்கரமாக சேதமடைந்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பில் 41 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது.

மேலும் 3,700 பேர் வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், 17 பேர் மாயமானதாகவும் கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் எரிமலை வெடித்ததில் கிட்டத்தட்ட 3,000 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதையடுத்து இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட ஜனாதிபதி ஜோகோ விடோடோ “விரைவில் உங்களுக்கான தேவைகள் நிறைவேற்றப்படும்” என்று மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

இருப்பினும் எரிமலை வெடித்ததில் காயமடைந்தவர்கள் பலர் உயிரிழந்து வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கிடையே நேற்று தேசிய பேரிடர் மேலாண்மை கழகம் இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பில் இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதேசமயம் 104 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பாலங்கள் பல இடிந்து விழுந்ததோடு ஆயிரக்கணக்கான கால்நடைகளும் பயங்கரமாக உயிரிழந்துள்ளன.

Categories

Tech |