Categories
உலக செய்திகள்

இப்போ இவங்களும் ஆரம்பிச்சிட்டாங்க..! ஒரே நாளில் 53 பேர் கொன்று குவிப்பு… பிரபல நாட்டில் பயங்கரம்..!!

நேற்று முன்தினம் நைஜீரியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 53 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

போகோ ஹராம் பயங்கரவாதிகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் செலுத்தி வருவதோடு, இராணுவவீரர்கள், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் என அனைவரையும் குறிவைத்து பயங்கரமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு ஆயுதக்குழுக்கள் நைஜீரிய நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் நிலவும் அசாதாரண சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அவர்களும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.

அதிலும் முக்கியமாக பல ஆயுதக் குழுக்கள் நாட்டின் வடமேற்கு பகுதியில் கொள்ளை, கொலை உள்ளிட்ட பல சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சுர்மி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்குள் சுமார் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் இரவு புகுந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு கண்ணில் படுபவர்களை எல்லாம் பயங்கரவாத ஆயுதங்களுடன் வந்திறங்கிய அந்த பயங்கரவாதிகள் குருவியை சுடுவது போல் சரமாரியாக சுட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கால்நடை பண்ணை மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இதே போல் ஐந்து கிராமங்களில் செல்லும் வழி எல்லாம் பயங்கரவாதிகள் மிக மோசமாக தாக்கியுள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் சுமார் 53 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

Categories

Tech |