Categories
உலக செய்திகள்

நடுராத்திரி ”3 வயது குழந்தையுடன் உறங்கிய பேய்” கேமரா பதிவால் அதிர்ச்சி …!!

இரவு தூங்கிக்கொண்டிருந்த மகன் அருகில் குழந்தை உருவம் இருந்ததைக் கண்டு தாய் அதிர்ச்சியடைந்தார்.

உலகில் தொழில்நுட்பத்தால் பல்வேறு குறும்புத்தனமான நிகழ்வுகள் நடைபெறுகிறது. அதே போலவே, மரிட்சா (Maritza) என்ற பெண்ணுக்குத் தொழில்நுட்பத்தால் இரவு துக்கமே பறிபோகியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.மரிட்சா என்பவர் தனது மூன்று வயது மகனை இரவு நேரத்தில் கண்காணிக்க தனியாக கேமரா பொறுத்தியிருந்தார். தினமும் கேமராவை கண்காணிக்கும் மரிட்சாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கேமரா திரையில் தனது மகன் அருகில் குழந்தை உருவத்தில் யாரோ படுத்திருப்பதைப் பார்த்து ஒருநிமிடம் உறைந்து போனார்.

பின்னர் உடனடியாக மகன் அறைக்கு ஓடிச்சென்று மொபைல் வெளிச்சத்தில் மகன் அருகே பார்த்தபோது யாருமே இல்லாததால் குழப்பத்தில் மூழ்கினார். ஒரு வேளை மகன் அருகில் பேய் தான் படுத்திருந்ததோ என்னும் பயத்தில் இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் விழித்திருந்தார். காலை மகன் அறைக்குச் சென்று மீண்டும் பார்த்தபோது தான் உண்மையை கண்டு பிடித்துள்ளார். அதாவது மகன் தூங்கும் மெத்தையிலிருந்த குழந்தை படத்தைத் தான் இரவில் பார்த்துப் பயந்துள்ளார் மரிட்சா.

இச்சம்பவம் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட மரிட்சா,” எனது மகன் அருகில் பேய் தான் படுத்திருந்துள்ளது என இரவு முழுவதும் நினைத்துக் கொண்டிருந்தேன். இதனால் எனது தூக்கம் முழுமையாகப் பறிபோனது. காலை மீண்டும் சென்ற போதுதான் புரிந்தது எனது கணவர் மெத்தையின் லேபிளை கிழிக்காமல் விட்டுள்ளார். இத்தனை குழப்பத்திற்குக் காரணமான எனது கணவரைக் கொலை செய்ய முடியும் எனப் பதிவிட்டார். தற்போது மரிட்சாவின் ஃபேஸ்புக் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது

https://www.facebook.com/maritza.elizabeth.73/posts/10157681438939555

Categories

Tech |