Categories
தேசிய செய்திகள்

63 வயதில்…. சந்தோஷமாக நடந்த திருமணம்…. சிறிது நேரத்தில் நேர்ந்த அதிர்ச்சி…!!

நபர் ஒருவரின் 63 வயதில் திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணப்பெண் உயிரிழந்துள்ளது மொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் வசிப்பவர் கல்யாண்குமார்( 63). இவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. ஏனெனில் மனநிலை பாதிக்கப்பட்ட தன்னுடைய சகோதரர் மற்றும் சகோதரியை கவனித்து கொள்வதிலேயே காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் லைலா(40) என்ற பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்து வீட்டிற்கு சென்றபோது லைலா திடீரென தரையில் மயங்கி விழுந்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர்கல்யாண்குமார் மற்றும் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் தனது மனைவியை பார்த்து 63 வயது கணவர் கதறி அழுதுள்ளார். 63 வயதில் கல்யாணம் நடந்த திருமணத்தை பார்த்து மொத்த கிராமமும் மகிழ்ச்சியில் இருந்துள்ளனர். ஆனால் திருமணம் நடந்துமுடிந்தது புதுப்பெண் உயிரிழந்ததால் மொத்த கிராமமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Categories

Tech |