2 வயது குழந்தை புற்று நோயாளிகளுக்காக தனது முடியை தானம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர் நேஹா ஜெயின். இவருக்கு எட்டு வயதுடைய மிஷிகா என்ற மகளும், இரண்டு வயதுடைய தஷ் ஜெயின் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு மிஷிகாவின் பள்ளியில் கேன்சர் நோயாளிகள் குறித்த ஒரு பிரச்சாரம் நடந்தது. அப்போது மிஷிகா தன் தலைமுடியை தானமாக வழங்கினார். அதனை அப்போதிலிருந்து இப்போது வரை வீட்டில் அடிக்கடி கூறிக்கொண்டே வந்தார்.
இந்நிலையில் அவரது 2 வயது தம்பியான தஷ் தனது தலைமுடியை கேன்சர் நோயாளிகளுக்கு தானம் செய்ய விரும்புவதாக தாயாரிடம் தெரிவித்தார். இதனைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த தாயார் அவனது முடியை நன்கு வளர்க்க தொடங்கினார். அவரது தாயாரும் தன் முடியை தானமாக வழங்கியுள்ளார். இந்நிலையில் தஷ் ஜெயின் புற்று நோயாளிகளுக்காக தனது முடியை தானம் செய்துள்ளார். இரண்டு வயது குழந்தையின் தான சிந்தனை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.