மலேசியாவில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகையால் வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் இந்தியாவிற்கு வருகை தரும் பயணிகள் கடும் சோதனைக்கு பின்பே நாட்டிற்குள் நடமாட அனுமதிக்கப்படுவர்.
அதன்படி, விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து வந்த பயணிகளிடம் நோய் தொற்று இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டபோது கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர் தனி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் ஒரு இளைஞருக்கு கொரோனாபாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.