Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில்…. தோல்வியடைந்த பரிவர்த்தனைக்கு அபராதம்…. தீர்வு என்ன…??

ஏடிஎம்மில் தோல்வியடைந்த பரிவர்த்தனைகளை கட்டணம் வசூலிப்பதற்கு தீர்வு கிடைக்குமா என்பது குறித்து பார்க்கலாம்.

நம்மில் பலரும் சில நேரங்களில் பணம் தேவைப்படும் போது ஏடிஎம் மையத்திற்கு சென்று அவசர அவசரமாக பணத்தை எடுப்போம். மேலும் நம்முடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? என்று தெரிந்து கொள்ளாமலேயே பணத்தை எடுப்பது உண்டு. சிலர் ஏடிஎம் எந்திரத்தில் எவ்வளவு பணம் இருக்கிறது? என்று தெரிந்து கொண்டு பணம் எடுப்பார்கள். சிலர் அப்படி எடுப்பதில்லை. ஒருவேளை வங்கிக் கணக்கில் 400 ரூபாய் மட்டுமே இருக்கிறது. ஆனால் நீங்கள் 500 ரூபாய் எடுக்க முயற்சி செய்தால் பணம் வராது. insufficient balance என்று செய்தி வரும். இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

இப்படி வங்கிக் கணக்கில் போதிய அளவில் பணம் இல்லாத சமயம் அதை எடுக்க முயற்சிக்கும் போது குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு தோல்வியடைந்த பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் நீண்டகாலமாகவே நடைமுறையில் இருக்கிறது ஆனால் இது குறித்து யாருக்கும் தெரிவதில்லை. எனவே இந்த விஷயத்தில் தேவையில்லாமல் கட்டணம் பிடித்தம் செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும்.

எவ்வளவு கட்டணம் பிடித்தம் செய்யப்படும்?

எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், கோடக் மகேந்திரா வங்கி இதற்கு கட்டணம் வசூலிக்கின்றன. எஸ்பிஐ பேங்க் வங்கி தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படவில்லை. கோடக் மகேந்திரா வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கியில் இருந்து கட்டணம் ரூ.25 வசூலிக்கப்படுகிறது.

 தீர்வு கிடைக்குமா?

ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழு கூட்டம் பிப்ரவரி 3 முதல் 5 வரை நடைபெறும். இந்த கூட்டத்தில் தோல்வியடைந்த பரிவர்த்தனைகள் தொடர்பான ஆலோசனைகள் இடம் பெறும். அப்போது  இவ்வாறு கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்த வேண்டும் என்று அனைத்திந்திய வங்கி கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு அபராதம் வசூலிப்பது சரியானது அல்ல என்று ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸிடம் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |