பிரான்சின் பாரிஸில் நடந்த ஆடை அணிவகுப்பில், ஒய்யார நடையிட்டு வந்த பெண்களுடன் பொம்மை வடிவ விலங்குகளின் தோற்றமுடைய உடையணிந்தும் பெண்கள் வந்தனர்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஸ்டெல்லா மெக்கார்ட்னி (Stella McCartney), பல ஆண்டுகளாக விலங்கு உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடந்த ஆடை அணிவகுப்பில், ஒய்யார நடையிட்டு வந்த பெண்களுடன் சேர்ந்து, ஸ்டெல்லா தயாரித்த பொம்மை வடிவ நரி, குதிரை, முயல், குதிரை என பல விலங்குகளின் தோற்றமுடைய உடையணிந்தும் பெண்கள் வந்தனர்.
இந்த நிகழ்வில் அவர் தயாரித்த பல வண்ண ஆடைகள் அனைத்தும், எந்தவொரு விலங்குகளின் தோல்களை இருந்து தயாரிக்கப்படாதவை ஆகும்.
இந்த நிகழ்வில் அவர் தயாரித்த பல கலர் கலரான வண்ண ஆடைகள் அனைத்துமே எந்த ஒரு மிருகத்தின் தோல்களிலிருந்தும் தயாரிக்கப்படாதவை ஆகும்.
இந்த ஆடைகளை அணிந்துக்கொண்டு பெண்கள் அணிவகுப்பில் நடந்து சென்றது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.