தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளம்பெண் கைக்குழந்தையுடன் சென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சீலையம்பட்டி பகுதியில் தம்பிதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகள் முன்பு திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கணவர் மாணவி இடையே வந்த தகராறில் தம்பிதுரை மனைவியை பிரித்து சென்றுள்ளார். இதனால் கிருஷ்ணவேணி குழந்தையுடன் தனியாக வசித்து வருகின்றார்.
இதனையடுத்து கிருஷ்ணவேணி தனது கைக்குழந்தையுடன் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஒரு பிளாஸ்ட் பையில் ஒரு பாட்டில் மண்ணெண்ணெய்யும் கொண்டு சென்று குழந்தையுடன் தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனைபார்த்த காவல்துறையினர் உடனடியாக கிருஷ்ணவேணியை தடுத்து நிறுத்தி அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது எனது கணவர் என்னை பிரிந்து வாழ்கிறார் என்றும், அவரை என்னுடன் சேர்த்து வைக்குமாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. எனவே என் கணவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும் என கிருஷ்ணவேணி கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பின் அவரை தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.