தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழத்தின் சார்பில் 3.5 கோடி மதிப்பீட்டில் 33 கிலோ வாட் அளவிலான துணை மின் நிலையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலக்கலான இன்னிசை கச்சேரிகள் நடைபெற்றது. இந்த விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி விழாவினை தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசியதாவது, தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கூடுதலாக 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட இருக்கிறது என்றும் கூறினார். மேலும் இந்த விழாவில் எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.