தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நிக்கி கல்ராணி. இவரும் பிரபல நடிகர் ஆதியும் காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திரை உலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி தம்பதியினர் திருமணம் முடிந்த கையோடு பாரிசுக்கு ஹனிமூன் சென்றனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர்.
இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் நிக்கி மற்றும் ஆதி தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் நிக்கி மற்றும் ஆதி தரப்பிலிருந்து குழந்தை குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.