Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அதிகமாக முடி வளர…! சூப்பரான ஐடியா…!

          அடர்த்தியாக அதிகமாக அழகாக முடி வளர்வதற்கான சிறிய தகவல் இந்த செய்தித் தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது…!

தலைமுடி பிரச்சனை தான் உலகில் தலையாய பிரச்சனையாக உள்ளது ஆண்கள் பெண்கள் என இருபாலரும் தங்கள் தலை முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

தலைமுடி அதிகமாக வளரவும் ஆரோக்கியமாக இருக்கவும் செயற்கையான கெமிக்கல் கலந்த மருந்துகளை நாட வேண்டும் என்பது இல்லை இயற்கையே நமக்கு பல விஷயங்களை தந்துள்ளது.

எண்ணெய் மசாஜ்:

எண்ணெய் மசாஜ்ஜை தலையில் செய்யும் போது நாம் தலைமுடி வேரை நன்றாக பலமாக்கி தலைமுடியை நன்கு அதிகரிக்க செய்கிறது இதை தேங்காய் எண்ணெய் கொண்டு செய்யலாம்.

மசாஜ்ஜை ஒரு மணி நேரம் நன்றாக தலையில் ஊறவிட்டு பின்னர் காலையில் நீரை கொண்டு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

உருளைக்கிழங்கின் பயன்:

உருளைக்கிழங்கு ஜூஸ் உருளைக்கிழங்கை வேக வைத்து தலையில் மசாஜ் செய்வதால் முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

இதற்கு உருளைக்கிழங்கை நன்றாக கழுவி அதன் தோலை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி அதை நன்றாக அரைத்து அதை தலைமுடியில் ஊற்றி பொறுமையாக மசாஜ் செய்த பின் தலையை நீரால் கழுவவேண்டும்.

வெங்காயத்தின் பயன்கள்: 

வெங்காயத்தில் உள்ள இயற்கை சந்துகள் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.

வெங்காயத்தை நறுக்கி அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து தலைமுடியில் தடவி 15 நிமிடங்கள் தலையை அப்படியே ஊறவைத்து பின்னர் தலைக்கு ஷாம்பு போட்டு குளிக்கலாம்.

முட்டையயால் கிடைக்கும் நன்மைகள்:

முட்டையில் அடங்கியுள்ள புரதச்சத்து தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.

முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக அரைத்து தலையில் மசாஜ் செய்யவேண்டும் என்று மனம் அதிகரித்து வளர்ச்சியைக் கொடுக்கும்.

சத்தான உணவால் நாம் பெரும் நன்மைகள்: 

உணவே மருந்து என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், எல்லாமே முடி வளர்ச்சியை அதிகரிக்க பயன்படுத்துகிறது.

நாம் எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுகிறோமோ அது நம் தலை முடி வளர்ச்சிக்கு பெரிதும் கை கொடுக்கிறது.

உடற்பயிற்சி:

உடற்பயிற்சி சரியான நேரத்தில் சாப்பிட்டுவிட்டு தூங்குவதுடன் சிறிதளவு உடற்பயிற்சிகளை செய்வதால் அது நம் தலை முடியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

இயற்கை மருத்துவம்: 

வீட்டில் காய்ச்சிய எண்ணெய்களுக்கு காய்ந்த நெல்லிக்காய், காய்ந்த வேப்பிலை, காய்ந்த துளசி இலை, உட்பட பல மூலிகைகள் தேவைப்படுகிறது

இது தங்கள் அருகாமையிலுள்ள நாட்டு மருந்து கடைகளில் இவை அனைத்தும் பொடியாகவே கிடைக்கும்.

Categories

Tech |