Categories
Uncategorized பல்சுவை

அட்சயா திருத்தியைக்கு தங்கம் மட்டும் இல்ல…. இதையும் வாங்கலாம்…. பார்த்து தெரிஞ்சிக்கோங்க….!!!

இந்த ஆண்டு மே 3ஆம் தேதி இந்து மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான அட்சய திருதியை (Akshaya Tritiya) கொண்டாடப்பட இருக்கிறது. இந்நாளில் எந்த பொருள் வாங்கினாலும் அது பல்கி பெருகும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. எனவே, தங்கம், வெள்ளி மற்றும் நகைகளை வாங்குவது இந்நாளில் சிறப்பம்சமாகவுள்ளது. இதனால் அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி, நகை வியாபாரம் களைகட்டும்.

அட்சய திருதியை நாளில் எதை வாங்கினாலும் அது பெருகி வளம் தரும் என்பதே நம்பிக்கை. அவ்வகையில் வேறு என்னென்ன பொருட்களை அட்சய திருதியை நாளில் வாங்கலாம்?

 

அட்சய திருதியை நாளில் லக்ஷ்மிக்கு பிடித்த பொருளான சிப்பி வாங்கி லக்ஷ்மியின் பாதத்தில் வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது. இதனை தொடர்ந்து தங்கத்தை போலவே தானியம் வாங்குவதும் உகந்ததாக கருதப்படுகிறது. மேலும்கோதுமை அல்லது அரிசி போன்ற தானியங்களை வாங்கலாம். இதனை தொடர்ந்து பானை வாங்குவது அதிர்ஷ்டம் தரும் எனவே அட்சய திருதியை நாளில் பானை வாங்கலாம்.  இதுமட்டுமின்றி சிப்பியை போலவே சங்குகளும் வாங்கி வீட்டில் வைத்தால் மகிழ்ச்சியும், செல்வமும் வரும் என்பது நம்பிக்கை. ஆனால் ஒரு சங்கு மட்டுமே வீட்டில் இருக்க வேண்டுமாம்.

Categories

Tech |