கொரோனா நிவாரண பொருட்களை கொண்டு சென்ற லாரியை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது உள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியின் தமிழரசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 26 வயதுடைய சக்திவேல் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் சக்திவேல் மது அருந்திவிட்டு சாலையில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக கொரோனா நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஓன்று சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து சாலையில் நின்று கொண்டிருந்த சக்திவேல் திடீரென்று அந்த லாரியை நிறுத்தி கண்ணாடிகளை உடைத்தும், லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியும் தகராறில் ஈடுபட்டார்.
இதனையடுத்து லாரி டிரைவரான வீராசாமி என்பவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தகராறில் ஈடுபட்டிருந்த சக்திவேலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொரோனா நிவாரண பொருட்களை கொண்டு சென்ற லாரியை வழிமறித்து கண்ணாடிகளை உடைத்து தகராறில் ஈடுபட்ட குற்றத்திற்காக சக்திவேலை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.