செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, புத்துணர்ச்சி பெற்று மீண்டும் தமிழகத்தினுடைய அரசியல் திசையை தீர்மானிக்கின்ற சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதற்கு ஆதாரமாக தான் இடைக்காலத்திலே கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நான் வெளியிலே சுற்றுப்பயணம் செய்யாமல் இருந்தாலும், இந்த சுற்று பயணத்தை கொங்கு மண்டலத்தில் தான் தொடங்குவது,
இதுதான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டை என்று சொன்னது போலவே , இந்த கொங்கு மட்டத்திலே ஒரு லட்சம் உறுப்பினர்கள் இப்போது தந்திருக்கிறார்கள் முதல் கட்டத்திலேயே..அடுத்த கட்டத்திலும் தருவார்கள்.
தமிழகம் முழுவதிலும் அறிஞர் அண்ணாவின் உடைய பிறந்தநாள் விழாவினை மிகச் சிறப்பாக நடத்துவது என்றும், சென்னையிலே 5000 அமரக்கூடிய மண்டபம், அதற்கு வெளியிலே 5000 பேர் இருக்கலாம். அந்த மண்டபத்தில் நடத்துகிற போது அதிக செலவாகிறது. கோடிக்கணக்கில் செலவாகிறது. அந்த அளவிற்கு பொருளாதார பலம் இல்லை. ஆனால் லட்சிய தாகம் இருக்கிறது.
ஆகவே தோழர்கள் நிரம்ப வருவார்கள். அந்தந்த ஊர்களிலே கொடி ஏற்றுவார்கள். அந்த நிகழ்ச்சியை வேகமாக நடத்துவதற்கும், ஆங்காங்கு தோழர்களை சந்திக்கிற இடங்களில் அதைப் பற்றி சொல்வதற்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் எவ்வளவு வேகமும், விறுவிறுப்பும் கொண்டவர்கள் இருக்கிறார்கள், என்பதை நான் இரண்டு நாட்களாக திருப்பூரிலும், கோவையிலும் பார்க்கிறேன். இதே உணர்ச்சி தான் தமிழ்நாடு முழுவதிலும் இருக்கிறது என தெரிவித்தார்.