Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா! 34,000 வருடங்களுக்கு முன்பாக உறுப்பு நீக்க ஆப்ரேஷன்‌‌…. அப்பவே சாதித்த குகை மனிதர்….!!!!

இந்தோனேஷியாவில் உள்ள ஒரு குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அந்த ஆய்வின் போது 31,000 ஆண்டுகளுக்கு முன்பாக மண்ணில் புதைக்கப்பட்ட ஒரு இளைஞனின் எலும்புக்கூடை கண்டுபிடித்துள்ளனர். அந்த எலும்பு கூட்டில் கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரியவந்தது. அதாவது அந்த வாலிபர் குழந்தை பருவத்தில் இருக்கும் போது அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த கடினமான அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த இளைஞர் நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதன் பிறகு இளைஞரின் எலும்பு கூடை ஆராய்ச்சி செய்த மருத்துவர் மெலண்ட்ரி போல்க் என்பவரும் அறுவை சிகிச்சை செய்ததை உறுதிப்படுத்தியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் அதற்கான அனைத்து விதமான வசதிகளும் இருக்கிறது. ஒரு மனிதனின் உடம்பில் இருந்து ஏற்படும் ரத்தப்போக்கு முதல் அவருடைய வலியை கட்டுப்படுத்தும் அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் இருப்பதால் ஒரு அறுவை சிகிச்சை என்பது 100 சதவீதம் சாத்தியமாகிறது.

ஆனால் 34 வருடங்களுக்கு முன்பாக எந்த ஒரு கருவிகளும் இல்லாமல் வெறும் கற்கருவிகளை மட்டுமே கொண்டு ஒரு இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது மிகவும் வியக்கத்தக்க ஒன்றாக இருக்கிறது என மருத்துவர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் இளைஞரின் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட கற்கருவிகள் குறித்தும் தொடர்ந்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Categories

Tech |