இங்கிலாந்து நாட்டின் மன்னர் சார்லஸ் மறைந்த இளவரசி டயானாவுக்கு கடந்த 1981-ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், 23 கேக்குகளும் விருந்து நிகழ்ச்சியில் வைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் 5 அடுக்குகளில் 5 அடியில் செய்யப்பட்ட கேக் ஒன்றும் திருமண நிகழ்ச்சியில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருமண நிகழ்ச்சியில் நைஜல் ரிக்கட்ஷூம் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.
இவர் திருமண நிகழ்ச்சியில் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு கேக் துண்டை இன்றளவும் பத்திரமாக வைத்திருந்த நிலையில், கடந்த ஆண்டு திடீரென நைஜல் உயிரிழந்தார். இதன் காரணமாக இங்கிலாந்து அரசு மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசி டயானாவின் திருமண நிகழ்ச்சியில் இடம்பெற்ற கேக்கை ஏலத்தில் விடுவதற்கு முடிவு செய்துள்ளது. இந்த கேக்கின் விலை ஏலத்தில் இந்திய மதிப்பில் 29 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 15 ஆயிரம் ரூபாய்க்கு தான் ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.