தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் தனுஷ் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களிலும் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் வாத்தி திரைப்படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் தென்காசியில் நடந்து வந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படத்தை ராக்கி மற்றும் சாணிக்காயிதம் போன்ற படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.
அதன்பிறகு இப்படத்தில் நடிகர் சந்திப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் கடந்த 1930-ம் ஆண்டு களில் நடைபெற்ற மிகப்பெரிய கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தி டப்பிங், பாடல், வெளியீட்டு உரிமை ஆகியவற்றை சேர்த்து 80 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. மேலும் இந்த படம் தான் நடிகர் தனுஷ் நடித்த படங்களில் ரிலீசுக்கு முன்பே அதிக விலைக்கு விற்பனையான படம் ஆகும்.