இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இவரின் இசை மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். இசையமைப்பாளராக இருந்த இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ”டார்லிங்” திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.
சமீபகாலமாக திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவலும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இவரின் முழு சொத்து மதிப்பு 75 கோடி என கூறப்படுகிறது.