Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!!!… என்னா தில்லு….. வானத்தில் துணிவு பேனரை பறக்கவிட்ட வீரர்கள்…. வைரல் வீடியோ….!!!!!

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 3-ம் பாடலான கேங்ஸ்டா டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் விளம்பர பேனரை விமானத்திலிருந்து குதித்து பறக்கவிட்டுள்ளனர். இந்த நிகழ்வு துபாயில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை லைகா நிறுவனம் தன்னுடைய twitter பக்கத்தில் அஜித் வழியில் என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளது. மேலும் இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |