இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த விவரத்தை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி 1 லட்சத்து 51 ஆயிரத்து 718 கோடி ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக வரிவசூல் வருவாய் அதிக அளவில் இருக்கிறது. அதன்படி 1.4 லட்சம் கோடிக்கும் மேல் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 718 கோடி வரி வசூல் ஆகியுள்ள நிலையில், மத்திய வரி 26,039 கோடியாகவும், மாநில வரி 33,396 கோடியாகவும் இருக்கிறது.
அதோடு செஸ் வரி 10,505 கோடியாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 540 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் தமிழகத்தில் மட்டும் 9 ஆயிரத்து 540 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தை காட்டிலும் 25 சதவீதம் அதிகம். மேலும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் 204 கோடி ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.