Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா…! இம்புட்டு திட்டமா ? பட்டியல் போட்ட எடப்பாடி…. செமையா செஞ்சு வச்சுருக்காரு…!!

சேலம் மாவட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் பலர் இணைந்த விழாவில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, இன்றைக்கு சேலம் மாநகரம் வளர்ந்து வருகின்ற மாநகரம். அதற்கேற்றவாறு போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும் என்பதற்க்காக எங்கெங்கெல்லாம் பொதுமக்கள் பாலங்கள்  கேட்டார்களோ, அங்கெல்லாம் உயர்மட்ட பாலத்தை கட்டிக் கொடுத்து, இன்றைக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாத மாநகரமாக

சேலம் மாநகரம் திகழ்கின்றது. அதே போன்று குடிநீர் பிரச்சினை….  அந்த குடிநீர் பிரச்சினையும் நாம தீர்த்து வைத்தோம். இந்த பகுதி மட்டுமல்ல,  புறநகர் பகுதியிலும் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக நிறைய திட்டங்களை நிறைவேற்றி கொடுத்தோம். அதோட கிராமப்புற சாலைகள் எல்லாம் தார் சாலைகளாக அமைத்துக் கொடுத்தோம். அது மட்டும்இல்லை. நெடுஞ்சாலை துறையை சார்ந்த சாலைகள் எல்லாம் தரம் உயர்த்தப்பட்டன,  சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டன.

ஆங்காங்கே சிறிய பாலங்கள்,  பெரிய பாலங்களாக விரிவு படுத்தப்பட்டது. இந்தியாவிலேயே தார் சாலை அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்குவதற்கு நான் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தபோது, அதிகமான சாலைகளை அமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தேன். அதேபோல இன்றைக்கு சட்டக் கல்லூரியை கொண்டு வந்தோம்.  நம்முடைய மாணவர்கள் குறைந்த கட்டணத்திலேயே சட்டம் பயில வேண்டும் என்பதற்காக சட்டக் கல்லூரியை கொண்டு வந்தோம்,  அடிக்கல் நாட்டினோம்.

இன்றைக்கு அவர்கள் திறக்க இருக்கிறார்கள். நாம் பெற்ற பிள்ளைக்கு திமுககாரர்கள் பெயர் வைக்கிற நிலைமையாய் போச்சு. அது மட்டுமல்ல சேலம் மாவட்டத்தில் பல  பாலங்கள், இங்கிருந்து மேட்டூர் வரை எடுத்துக்கிட்டிங்கன்னா…. எங்கெங்கெல்லாம் ரோடு கிராஸ் ஆயிடுச்சோ,  அங்கெல்லாம் பாலம். ஓமனூரில் இருந்து மேச்சேரி. அற்புதமான சாலை. ஓமலூரில் இருந்து மேச்சேரி நான்கு வழி சாலை, பிரமாண்டமான சாலை.

அதேபோல ஓமலூர் இருந்து கொங்கலாபுரம் – சங்ககிரி – திருச்செங்கோடு நான்கு வழிச் சாலை. அந்த சாலை பணியும் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. சேலம் டூ திருப்பத்தூர்,  அதுவும் நான்கு வழிச்சாலை. அந்த பணியும் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஆக நம்முடைய பகுதிகளிலிருந்து….  சேலத்தில் இருந்து பெரிய நகரங்களுக்கோ… இல்லை பல்வேறு ஊர்களுக்கு செல்கின்ற சாலைகள் எல்லாம்  தரமான சாலையாக, விரிவுபடுத்தப்பட்டு, போக்குவரத்து நெரிசல் இல்லாமல்,  விபத்து இல்லாத ஒரு சாலையாக அமைத்து கொடுத்தோம் என பெரிய பட்டியலை போட்டார்.

Categories

Tech |