தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம்சரண். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் ‘ஆர்சி 15’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து இவரின் சம்பளமும் கணிசமாக உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராம்சரண் வரிக்குதிரை டிசைன் இருக்கும் சட்டை அணிந்தபடி தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இந்த சட்டையின் விலை மட்டும் 2 லட்சமாம். இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.