தமிழ், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரம்யா. இவர் தனுஷ் உடன் நடித்த பொல்லாதவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பிரபலம். அதன்பிறகு ஒரு கட்டத்தில் திரைத்துறையில் இருந்து விலகிய ரம்யா காங்கிரஸ் கட்சியில் இணைந்து மண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார். இவர் தற்போது அரசியலில் இருந்து விலகி மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது உத்தர கன்னடா என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில், தன்னுடைய 40-வது பிறந்தநாளை ஜப்பானில் கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில் நடிகை ரம்யாவின் தீவிர ரசிகரான பெங்களூருவை சேர்ந்த ஓவியரான பாதல் நஞ்சுண்டசாமி என்பவர் ஒரு சுவரில் 35 அடி உயரத்திற்கு சீட்டுக்கட்டில் ஆர்ட்டின் ராணி இருப்பது போன்று ரம்யாவின் ஓவியத்தை வரைந்து வைத்துள்ளார். இந்த புகைப்படத்தை ரம்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.
This is insane!! Thank you so much Badal 🙈🙈♥️♥️🤗🤗 https://t.co/wWTotYGaTO
— Ramya/Divya Spandana (@divyaspandana) November 30, 2022