தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு தமன் இசையமைக்க முதல் பாடலான ரஞ்சிதமே அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்துள்ள நிலையில், படத்தின் ஃப்ரீ ரிலீஸ் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தமிழக வெளியீடு உரிமை 70 கோடிக்கும், ஹிந்தி டப்பிங் உரிமை 32 கோடிக்கும், கர்நாடகா வெளியீடு உரிமை 7.5 கோடிக்கும், கேரளா வெளியீடு உரிமை 6.5 கோடிக்கும், ஓவர்சீஸ் 35 கோடிக்கும், ஆடியோ வெளியீட்டு உரிமை 10 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை 60 கோடிக்கும், சாட்டிலைட் உரிமை 50 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.
இதன்படி பார்த்தால் படம் மொத்தம் 271 கோடி ரூபாய்க்கு வியாபாரமாகியுள்ளது. மேலும் ரிலீசுக்கு முன்பே படம் நல்ல வியாபாரம் ஆகி வருவதால், வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.