தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தற்போது பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசி வருகின்றார். இதில் தமிழக அரசு பேசிய கோரிக்கை பட்டியலையே மத்திய அரசிடம் வழங்க இருக்கின்றது. இது தொடர்பாக காலை செய்தியாளரை சந்தித்த முதல்வர் முக.ஸ்டாலின், மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் ஏற்கனவே வைக்கப்பட்ட பழைய கோரிக்கைகளை நினைவுபடுத்த இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது இதோடு கூடுதலாக புதிய கோரிக்கைகளை வைக்கும் வகையில் தமிழக அரசு பெரிய பட்டியலை போட்டுள்ளது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினும், இதையே வலியுறுத்தவர் என தெரிகின்றது. அதன்படி பிரதமருடனான சந்திப்பில், மேகதாது அணை விகாரகம், முல்லைப் பெரியாறு, நதிநீர் இணைப்பு, காவிரி நதிநீர் பிரச்சனை, கச்சத்தீவு மீட்பு, மீனவர்களுக்கான தேசிய ஆணையம், பாரம்பரிய மீன் பிடிப்பு முறையை உறுதிப்படுத்துதல், மின்சார திருத்தச் சட்ட மசோதாவை திரும்ப பெறுதல்.
நிலுவையில் இருக்கக்கூடிய தமிழகத்திற்கான நிதி ஆதாரங்களை முழுமையாக வழங்குவது போன்ற பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்திருக்கின்றார். நீட் விவகாரம் இந்த சந்திப்பின்போது அதி முக்கியமானதாக முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து தமிழகத்தில் நீட் தொடர்பான தற்கொலைகள் நடந்து வரக்கூடிய சூழலில், அந்த விஷயத்தை சுட்டிக்காட்டி இந்த சந்திப்பின்போது நீட்டு விவரம் தொடர்பாக தனது கோரிக்கையை அவர் முன்வைக்க இருக்கின்றார்.
அதேபோல ஜிஎஸ்டி நிலுவை தொகையினை உரிய நேரத்தில் வழங்குவது, பேரிடர் காலத்தில் உரிய முறையில் அந்த நிதிநிலை வழங்குவது மற்றும் வரக்கூடிய காலங்கள் தமிழகத்திற்கு மழை உள்ளிட்டவை வரவிருக்கின்றது அந்த சமயத்தில் தேவையான உதவிகளை மத்திய அரசு உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அவர் வலியுறுத்த இருக்கின்றார்.
மற்றபடி நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கக்கூடிய கோரிக்கையான மதுரையில் எய்ம்ஸ் அமைத்தல் மற்றும் தற்போது சென்னை விமான நிலைய விரிவாக்கம், கோவை விமான நிலையம் விரிவாக்கம், தமிழகத்தின் கட்டமைப்பு சார்ந்த திட்டங்கள் தொடர்பான முக்கிய கோரிக்கைகளும் இந்த சந்திப்பின்போது முன்வைக்க இருக்கின்றார்.
புதிய கல்விக் கொள்கையை நீக்குதல், சிறுகுறி தொழிலுக்கான சிறப்பு அங்கீகாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டும். சென்னை மெட்ரோவிற்கான இரண்டாம் கட்ட திட்டத்திற்கான விரிவுப்பணிகளுக்கான நிதிநிலை ஒதுக்குவது போன்ற பல்வேறு முக்கிய அம்சங்களும் நினைவூட்டப்பட இருக்கின்றது. இந்த சந்திப்பின்போது நீண்ட நாட்களாக இருந்து வரக்கூடிய கோரிக்கைகள் பிரதானப்படுத்தவும், புதிதாக வைக்கக்கூடிய கோரிக்கைகளை உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த சந்திப்பின்போது பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்திருக்கின்றார்.