விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ஜி.பி முத்துவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவருக்காகவே பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கின்றனர். டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜிபி முத்து தடைக்குப் பிறகு youtube-ல் பல்வேறு விதமான நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சமீப காலமாகவே ஜி.பி முத்து மிகவும் கவலையாக காணப்படுகிறார். அதுமட்டுமின்றி சமீபத்தில் என்னை வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் என்று ஜிபி முத்து கூறியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் பிக்பாஸ் ஜிபி முத்துவுக்கு அறிவுரை வழங்கி வீட்டிற்குள் இருக்குமாறு கூறியது.
இதனையடுத்து தற்போது ஜி.பி முத்துவை மகிழ்ச்சி படுத்துவதற்காகவும், அவருக்கு தீபாவளிக்கு ஏதாவது கிப்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் பிக்பாஸ் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அதாவது வீட்டிற்குள் ஜிபி முத்துவின் குடும்பத்தினரை அழைத்து வருவதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஜி.பி முத்துவுக்காகத்தான் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதால் ஜிபி முத்து வீட்டை விட்டு செல்வதை பிக்பாஸ் நிகழ்ச்சி விரும்பவில்லை. இதனால்தான் ஜி.பி முத்துவின் குடும்பத்தினரை வீட்டிற்குள் அழைத்து வருவதற்கு பிக்பாஸ் முடிவு செய்துள்ளது.