Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. ”விக்ரம்” திரைப்படம் இதுவரை செய்த மொத்த வசூல்…. எவ்வளவு தெரியுமா….?

‘விக்ரம்’ படம் இதுவரை செய்த வசூல் சாதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”.

திரை விமர்சனம்: விக்ரம் | Vikram Movie Review - hindutamil.in

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 4 வருடங்களுக்கு பிறகு கமல் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

இதனையடுத்து, இந்த படம் ரிலீசான இரண்டு நாட்களில் உலக அளவில் 100 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விக்ரம் படம் இதுவரை செய்த வசூல் சாதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் வெளியான மூன்று நாளில் இந்த திரைப்படம் 150 கோடி வசூல் சாதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அண்ணாத்த படத்தின் வசூலை இந்த படம் முறியடித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 

Categories

Tech |