Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! என்னம்மா பாட்டு பாடி டான்ஸ் ஆடுறாரு…. மாணவர்களை குஷி படுத்திய வடிவேலு….. நீங்க வேற லெவல் சார்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. சில பல பிரச்சனைகளால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 என படு பிஸியாக இருக்கிறார். இவர் தன்னுடைய பாடி லாங்குவேஜ் மூலமாக பல ரசிகர்களை தன் வசப்படுத்தினார். சினிமாவை விட்டு நடிகர் வடிவேலு ஒதுங்கி இருந்தாலும் வடிவேலுவின் காமெடிகளை வைத்து இணையத்தில் மீம்ஸ் கிரியேட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் வடிவேலு ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக ‘எட்டணா இருந்தா எட்டூரும் எம்பாட்டு கேட்கும்’ என்ற பாடலை பாடிக்கொண்டே நடனம் ஆடினார். இதை பார்த்த மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆக்ரோஷமாக கத்தி வடிவேலுவை உற்சாகப்படுத்தினர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |