கேரள மாநிலத்தில் பிரபலமான பாம்பு பிடி வீரராக வாவா சுரேஷ் இருக்கிறார். இவர் சிறிய பாம்புகள் முதல் கருநாகம் வரை அனைத்து வகையான பாம்புகளையும் லாவகமாக பிடிப்பதில் வல்லவர். இவர் பாம்பு பிடிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படத்தை பார்க்கும் போது மிகவும் திகிலாகவும், பயமாகவும் இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் கூட வா வா சுரேஷை ஒரு நல்ல பாம்பு கடித்தது.
இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாவா சுரேஷ் கோமாவுக்கே சென்று விட்டார் என்று கூறப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார். இதனையடுத்து தற்போது இவர் ராஜநாகம் ஒன்றுக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு தான் ராஜா நாகத்திற்கு அவர் முத்தம் கொடுத்துள்ளார். ஆனால் அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்ப்பவர்கள் வாவா சுரேஷுக்கு இருந்தாலும் ரொம்ப தான் தைரியம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்