திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மகளிர் இவ்வளவு பேர் உட்கார்ந்து இருக்கீங்க. இன்னைக்கு எவனோ சொல்றான் பெரியார் அது சொன்னாரு. இது சொன்னாரு ? அப்படின்னு. அது கிடையாது நோக்கம்.. ஆணும், பெண்ணும் சமமாக இருக்க வேண்டும். எல்லா ஜாதிக்காரங்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். தீண்டாமை இருக்கக் கூடாது. யாரையும் ஒருவருக்கு ஒருவர் வெறுக்க கூடாது. சமூக நீதி இருக்க வேண்டும்.
இதைச் சொல்லி தான் பெரியார் செயல்பட்டார். பெரியார் சொன்னதினுடைய விளைவு தான், அதே மாடலில் இன்று தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருக்கின்ற தளபதி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். அரசு பள்ளியிலே படிக்கிறவர்கள் எவ்ளோ கஷ்டப்படுவார்கள் என்று எனக்கு தெரியும். அந்த அரசு பள்ளியிலே படிக்கின்ற மாணவர்களுக்கெல்லாம் உயர் கல்வி படிக்க வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு.
சேகர்பாபு அடிக்கடி என்கிட்ட ஒன்னு சொல்லிட்டு இருப்பார். பாரதி மகளிர் காலேஜ் கட்டிடம் கட்டுங்க, அதை பண்ணுங்க, இதை பண்ணுங்கன்னு என அவர் சொல்லாத நாளே இருக்காது. அந்த அளவுக்கு அந்த கல்லூரியின் மீது அக்கறை உள்ளவர். ஏனென்றால் அது மகளிர் கல்லூரி என்பதால் கிடையாது. கவர்ன்மென்ட் காலேஜ்ங்கிறதுனால அவருக்கு அந்த அக்கறை என தெரிவித்தார்.