மார்ச் 23 ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ள இன் டு தி வைல்ட் நிகழிச்சியின் ப்ரோமோ விடியோவை பீயர் கிரில்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பியர் கிரில்ஸ் உடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடக காட்டுக்குள் மேற்கொண்ட சாகச பயணம் தொடர்பான இன் டு தி வைல்ட் நிகழ்ச்சி வருகின்ற மார்ச் 23ஆம் தேதி டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.தமிழக மக்கள் இந்த நிகழ்ச்சியை காண பெரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இதற்கான புரோமோ வீடியோ ஒன்றை பியர் கிரில்ஸ் அவரது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார். இது தற்பொழுது பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் திரைப்படத்தில் அசத்தலாக செய்யும் ஸ்டைலிஷான நடை கண்ணாடியை கைகளால் சுழற்றி மாற்றுதல் உள்ளிட்ட தனது திறமைகளை நடைமுறை பாவனையாகவே காட்டியுள்ளார். இது ஒரு சாகசப் பயணமாக இல்லாமல் ஒரு திரைப்படம் ஆகவே நமக்கு காட்சி அளிக்கும் என்பது உறுதி.