Categories
திருப்பூர் மாநில செய்திகள்

அடேங்கப்பா…… கோடை காலத்துல இப்படி ஒன்னா…… பணம் காய்க்கும் எலுமிச்சை மரம்….!!

கோடை காலம் வரை வர இருப்பதையொட்டி எலுமிச்சைபழம் தங்களுக்கு நல்ல மகசூலை தந்து லாபத்தை ஈட்டி தருவதாக விவசாயி ஒருவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கோடை காலம் வரப்போகிறது என்றாலே பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுகிறது. வீட்டை விட்டு வெளியே வரவே தயங்குவார்கள். ஆனாலும் அன்றாட வேலையை முடிக்க வேண்டுமே என்ற கட்டாயத்தினால் வீட்டை விட்டு வெளியே வரும் நபர்கள் வெயிலினால் ஏற்படும்  நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம் பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை வாங்கி உட்கொள்வது தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்டவற்றில் விற்பனை அதிக அளவில் இருக்கும்.

அதேபோல் எலுமிச்சம்பழத்தின் விற்பனையும் அமோகமாக இருக்கும். ஆனால் வெயில் காலத்தில் அதன் மகசூல்  அதிகமாக இருக்காது. ஆங்காங்கே விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் திருப்பூர் மாவட்டத்தில் விவசாயி ஜெகதீஸ் என்பவர் எலுமிச்சைபழ மகசூல் செய்து வருகிறார். அவர் கூறியதாவது,

எலுமிச்சம் பழத்திற்கு பொதுவாக குறைவான தண்ணீரே தேவைப்படும். நாங்கள் வேலூர் மாவட்டத்திலிருந்து ரூபாய் 180க்கு நாற்று  வாங்கி வந்து 50 ஏக்கர் நிலத்தில் 5 செடிகள் நட்ட மூன்று வருடத்தில் அவை வழங்கும் நல்ல மகசூலை எங்களுக்குக் கொடுத்து வருகிறது.

ஆண்டுதோறும் எங்களது எலுமிச்சம்பழம் நல்ல விற்பனையில் நஷ்டம் இல்லாமல் கொண்டு செல்கிறது. வாரத்திற்கு மூன்று முறை பழங்களை பறிக்கலாம். 50 செடிகளிலிருந்து வாரத்திற்கு 80 கிலோ பழங்கள் பறிக்கப்பட்டு  நல்ல விலையில் விற்பனை ஆகிறது என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |