Categories
பல்சுவை

ஆதார் கார்டை இனி ஈஸியா செல்போனிலேயே டவுன்லோட் செய்யலாம்…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

இந்திய மக்களுக்கு மிக அத்தியாவசிய ஆவணமாகவுள்ள ஆதார் அட்டையை நமது செல்போன் மூலமாக பதவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதியை UIDAI வழங்கியுள்ளது.

இந்திய நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை மிகவும் அவசியமானதாக இருக்கிறது. அடையாள ஆணையத்தால் ஒவ்வொருவருக்கும் 12 இலக்க தனித்துவமான எண் வழங்கப்பட்டு இருக்கும். அரசின் எல்லா அலுவலகம் மற்றும் திட்டங்களிலும் ஆதார் அட்டை தான் முக்கிய ஆவணமாக இருக்கிறது. ஆதார் அட்டையில் நபருடைய கைரேகை, கருவிழி படம், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர் விவரம் ஆகிய அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கார்டு, பான் கார்டு மற்றும் வங்கி விவரங்கள் அனைத்துடனும் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் UIDAI தனது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் புதிதாக ஒரு புதுப்பிப்பை செய்துள்ளது. அதாவது தமது ஆதார் அட்டையை எளிதாக பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் நம்முடைய ஆதார் அட்டையை மறந்து விட்டு சென்றிருக்கும் சமயங்களில் நமது செல்போன் மூலமாக எளிய முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பான அறிவிப்பில் “முழுமையான ஆதார் எண்ணைக் காண்பிக்கும் ரெகுலர் ஆதார் அல்லது கடைசி 4 இலக்கங்களை மட்டும் காட்டும் மாஸ்க்டு ஆதார் போன்றவற்றில் எது வேண்டுமோ அதனை பயனர்கள் பதிவிறக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது”என்று குறிப்பிட்டுள்ளது.

பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

1. முதலில் UIDAI -ன் அதிகாரப்பூர்வ இணையதளமான “eaadhaar.uidai.gov.in” க்கு செல்ல வேண்டும்.

2. அதில் Download Electronic Copy Of Your Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. இந்த பகுதியில் உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்

4. மாஸ்க்டு ஆதார் அட்டைக்கு, I Want a Masked Aadhaar என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

5. Sent OTP ஓடிபி என்பதை கிளிக் செய்து, வரும் OTP எண்ணை உள்ளிட்ட Submit என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

6. இப்போது Download Aadhaar என்பதை தேர்வு செய்து உங்கள் ஆதரின் PDF வகையை பெறலாம்.

7. இந்நிலையில் உங்கள் கடவுச்சொல்லை பயன்படுத்தி உங்கள் ஆதார் அட்டையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

8. உங்களுக்கு தேவைப்படும் சமயங்களில் உங்கள் ஆதாரின் PDF-ஐ பயன்படுத்திக்கொள்ளலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக மாஸ்க்டு ஆதார் உங்கள் ஆதார் எண்ணின்முதல் 8  இலக்கங்களை மறைவாக வைத்திருக்கிறது.

Categories

Tech |