முழு ஊரடங்கின் போது திறந்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள முனியங்குறிச்சி பகுதியில் இரண்டு பெட்டி கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த துணை தாசில்தார் இளவரசு மற்றும் காவல் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது காவல்துறையினர் முழு ஊரடங்கின் போது விதிமுறைகளை மீறி விற்பனை செய்து கொண்டிருந்த 2 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இதனையடுத்து பெரியதிருகொணம் பகுதியில் அமைந்துள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கத்திலிருந்து தனியார் சிமெண்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்பு கல்லை ஏற்றிக் கொண்டு செல்லும் லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்கள் கூறும்போது ஊரடங்கு சமயத்தில் கடைகள் அடைக்கப்பட்டபோதிலும் இவ்வாறு லாரிகள் செல்வதை அதிகாரிகள் ஏன் அனுமதிக்கின்றனர் என்று கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி, கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனையடுத்து அதிகாரிகள் முழு ஊரடங்கு முடியும் வரை இந்தப் பகுதியில் லாரிகள் செல்ல அனுமதிக்கப்படாது என்று உறுதி அளித்த பிறகு தான் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.