Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை பிடிக்க சென்ற போது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…

மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் இசக்கி முத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு மீன் வியாபாரியான வள்ளி குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர் இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து காட்டுப் பகுதிக்குச் சென்று விலங்குகளை வேட்டையாடுவது பழக்கம். இந்நிலையில் வள்ளி குமார் தனது நண்பர்களுடன் இணைந்து ஒக்க நின்றான் பகுதியிலுள்ள மலையடிவாரத்திற்கு வேட்டையாடுவதற்காக சென்றிருந்தார். அப்போது அங்கு குருவன்கோட்டை பகுதியில் வசிக்கும் பால்ராஜ் என்பவர் தனது தோட்டத்திற்குள் தினமும் புகுந்து பயிர்களை நாசம் செய்யும் விலங்குகளை தடுப்பதற்காக மின்வேலி அமைத்துள்ளார்.

இதனை அறியாத வள்ளி குமார் அவ்வழியாக சென்ற போது எதிர்பாராதவிதமாக மின்வேலியில் சிக்கியதால் அவரின் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனைப் பார்த்த அவரின் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளனர். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்த காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வள்ளி குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |