Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதை சுத்தம் செய்து தாங்க… விவசாயிகளின் போராட்டம்… அதிகாரியின் பேச்சுவார்த்தை…!!

உதவி கலெக்டர் அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் உதவி கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு வில்லிசேரி பகுதியில் வசிக்கும் விவசாயிகள் இணைந்து காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பிரேம்குமார் தலைமையில் திடீரென  போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த உதவி கலெக்டர் சங்கரநாராயணர் மற்றும் காவல் துறையினர் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் நாங்கள் வசிக்கும் வில்லிசேரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. அந்த சாலையின் கீழே 40 அடி அகலத்திற்கு நீரோடை அமைந்துள்ளது. அந்த நீரோடையிலிருந்து அதன் அருகில் இருக்கும் கத்தாழை ஓடை வழியாக அப்பகுதியில் அமைந்துள்ள 2,000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ந்து வருகின்றது என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்த நீரோடை பகுதி தற்போது  மூடி விட்டதால் அதிலிருந்து தண்ணீர் வராமல் 2,000 ஏக்கர் விளை நிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றோம் என மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர். ஆகவே இந்த நீர் வழிப்பாதையை விரைவில் சுத்தம் செய்து தர வேண்டும் எனவும், அவ்வாறு தராவிட்டால் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்ததோடு கோரிக்கை மனு ஒன்றை உதவி கலெக்டரிடம் கொடுத்துள்ளனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட உதவி கலெக்டர் சங்கரநாராயணர் என்பவர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

Categories

Tech |