விருதுநகரில் தொழிற்சங்கத்தினர் சார்பாக போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை தவிர்த்தல், மின்சார, மோட்டார் வாகன சட்டத்திருத்தங்களை ரத்து செய்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.