Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதை விற்க சென்றபோது… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

வீடு புகுந்து செல்போனை மர்ம நபர்கள்  திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் சதாம் உசேன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சதாம் உசேன்  உறங்கிக் கொண்டிருக்கும் போது அவரின் வீட்டு பின் பகுதியில் உள்ள கதவை உடைத்து கொண்டு  திடீரென நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்து ஆறு செல்போன்களை திருடிச் சென்று விட்டனர். இதனையடுத்து காலையில் எழுந்து பார்த்த சதாம் உசேன் தங்களது ஆறு செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக அவ்வழியாக 2 வாலிபர்கள் கையில் பிளாஸ்டிக் கவருடன் சென்று கொண்டிருந்தவர்களை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த கவரில் செல்போன்கள் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தங்கம்மாள்புரம் பகுதியில் வசிக்கும் பெரியதுரை மற்றும் முத்துக்குமார் என்பதும், அவர்கள் சதாம் உசேன் வீட்டில் திருடிய செல்போன்களை விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் பெரியதுரை மற்றும் முத்துக்குமார் விற்பனைக்காக கொண்டு சென்ற செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் செல்போன்களை திருடிய குற்றத்திற்காக அவர்கள் 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |