மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மையம் கட்சியினரின் சார்பாக டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வை குறைக்க கோரி தாலுகா அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் ராணுவ வீரர் பி.ரமேஷ் தலைமை தாங்கினார்.
இதனையடுத்து போராட்டத்தை நகரச் செயலாளர் எஸ்.குமார் தொடங்கி வைத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை குறைக்கவும், மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். அதன்பின் சைக்கிளுக்கு காற்றடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் குமரேசன், துரைக்கண்ணன் மற்றும் பெரும்பாலானோர் கலந்து கொண்டு முடிவில் எஸ். திருநாவுக்கரசு நன்றி தெரிவித்துள்ளார்.