Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதனை இயக்கம் போது… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள இலத்தூர் பகுதியில் மகாராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வெள்ளத்தாய் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வெள்ளத்தாய் தனது வீட்டில் தண்ணீரை பிடிப்பதற்காக மின் மோட்டாரின் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது.

இதில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த வெள்ளத்தாயை அருகில் உள்ளவர்கள் மீட்டு   உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு வெள்ளதாய்யை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று வெள்ளதாயின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |