ஊராட்சி சமுதாயக் கூடத்தில் வைத்து ஆதார் அட்டை சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள தோகமலை ஒன்றியத்திற்குட்பட்ட வடசேரி ஊராட்சி சமுதாயக் கூடத்தில் வைத்து ஆதார் அட்டை சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதில் பெயர் நீக்குதல், பெயர் சேர்த்தல், ஆண்டு, மாதம், பிறந்த தேதி மற்றும் புதிய அட்டை விண்ணப்பித்தல் போன்ற பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாமில் வடசேரி ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளனர். மேலும் இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மற்றும் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் என பலர் செய்திருந்தனர்.