ஆதரவற்றோர் சடலத்தை அடக்கம் செய்வதற்கான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ரயில்வேதுறை காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில்வே காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தற்கொலை செய்து கொள்பவர்கள் மற்றும் ரயில் மோதி உயிரிழந்தவர்களின் சடலத்தை ரயில்வே காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு இறந்தவர்களின் சடலத்தை அவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கின்றனர். ஆனால் அவர்கள் யார் என்று தெரியாத நிலையில் ரயில்வே காவல்துறையினர் சேர்ந்து ஆதரவற்றோர் சடலத்தை அடக்கம் செய்து வருகின்றனர்.
ஆகவே இதற்கு மத்திய அரசு உரிய நிதி வழங்க வேண்டும் என்று ரயில்வே காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆதரவற்றோர் ஒருவரின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு மத்திய அரசு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றனர். ஆனால் அந்த பணம் வருவதற்கு மிகவும் காலதாமதம் ஆகுவதால் அந்த ஆதரவற்றோர் சடலத்தை ரயில்வே காவல்துறை அதிகாரிகள் அடக்கம் செய்கின்றனர். எனவே ஆதரவற்றோர் சடலத்தை அடக்கம் செய்வதற்கான உரிய நிதியை அரசாங்கம் உடனே வழங்கினால் நன்றாக இருக்கும் என்று ரயில்வே காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.