Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அதே மாதம் அதே தேதி… மோகன்லாலின் படம் ரிலீஸ்… படக்குழு அறிவிப்பு…!!!

மோகன்லால் நடிப்பில் ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள பிரம்மாண்ட வரலாற்று படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது .

மலையாளத் திரையுலகில் மோகன்லால் நடிப்பில் மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் வரலாற்றுப் படம் ‘மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’. இந்தப் படம் மலையாளம், தமிழ் ,ஹிந்தி உட்பட ஐந்து மொழிகளில் தயாராகியுள்ளது . தமிழில் இந்த படத்திற்கு மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது . 16ஆம் நூற்றாண்டில் கடல்வழியாக இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய குஞ்சலி மரைக்காயர் என்ற  வீரரின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகியுள்ளது . இதில் குஞ்சலி மரைக்காயராக நடிகர் மோகன்லால் நடித்துள்ளார்.

Keerthy Suresh in Marakkar-Arabikadalinte Simham; character poster out |  Mohanlal and Keerthy Suresh in Marakkar

மேலும் இந்த படத்தில் அர்ஜூன் ,சுனில் ஷெட்டி, மஞ்சுவாரியார், கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்த படம் கடந்த வருடம் மார்ச் 26-ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது ‌. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது . இதையடுத்து இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என பரவிய தகவலுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்து ரிலீஸ் தேதியை அறிவித்து உள்ளது . கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட அதே தேதி அதாவது மார்ச் 26-ல்  இந்த வருடம் வெளியிடவுள்ளனர். இதனை தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Categories

Tech |