Categories
உலக செய்திகள்

நல்லவேளை தப்பிச்சுட்டார்…. கைதான வெளிநாட்டினர்…. செய்தி வெளியிட்ட ஊடகங்கள்…!!

மடகாஸ்கர் நாட்டின் அதிபர் படுகொலை செய்ய முயற்சித்த சம்பவத்தில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

மடகாஸ்கர் நாட்டின் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினா ஆவார். இவர் மர்ம கும்பல் ஒன்றால் படுகொலை செய்ய முயற்சித்த சம்பவத்திலிருந்து உயிர் தப்பியதாக APF செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அதிபர் படுகொலையின் முயற்சியில் வெளிநாட்டினர் மற்றும் மடகாஸ்கரில் வசிப்பவர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்தில் இரு பிரெஞ்சுகாரர்களும் அடங்குவர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு வெளிநாட்டவர் Franco-Malagasy யைச் சேர்ந்த Paul Rafanoharana மற்றொருவர் Philippe Francois என்னும் பிரெஞ்சுகாரர் என RFI வானொலி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து Paul Rafanoharana அவரின் வீட்டிலும், Philippe Francois என்ற பிரெஞ்சுகாரர் இவாடோ விமான நிலையத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |