Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற ஷேர் ஆட்டோகளுக்கு …. அபராதம் விதித்த அதிகாரிகள் ….!!!

தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி  நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது ,அதி வேகமாக சென்று விபத்துக்கள் ஏற்படுவது போன்ற புகார்கள் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு வந்துள்ளது. இந்தப புகாரின் பேரில் தஞ்சை போக்குவரத்து துணை ஆணையர் அழகரசு உத்தரவின்படி ,நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவுறுத்தலின்படி வட்டார போக்குவரத்து அலுவலரான வெங்கட கிருஷ்ணன் தலைமையிலான அலுவலர்கள் நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்  சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற 18  ஷேர் ஆட்டோக்களுக்கு ரூபாய் 2000 வீதம் ரூபாய் 42 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதோடு போக்குவரத்து நடைமுறையை மீறி வாகனம் ஓட்டி செல்லும் வாகனத்தை கண்காணித்து அபராதம் வசூலிப்பது மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்வது  போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார் .

Categories

Tech |