உடல் சொல்வதை மட்டும் கேட்டு நடப்பது என்பது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போன்றது மனம் சொல்வதை மட்டும் கேட்டு முடிவெடுப்பது கல்லைக்கட்டி கடலில் விழுவதை போன்றது உடலும் மனமும் ஒரு சேர பயணம் செய்தால் மட்டுமே உன் வாழ்வு பூரணமாகும்.
1. தேவையில்லாததை தூக்கி ஏரி அழகான அற்புதமான தத்துவங்களால் மனதை நிரப்பு உலகமே உன் தேசம் பிரபஞ்சமே உன் இறை.
2. தேசப்பற்றும் தெய்வீகமும் உன் இதயத்துடிப்பாக ஞானம் தேடி வராது தேடினால் வரும்.
3. வாழ்வை கொண்டாடாமல் விட்டுவிட்டால் அதுவே மிகப்பெரிய பாவம்.
4. பட்டாம்பூச்சியாய் மாற புழுவை வாழ்.
5. புழுவை கண்டு மற்றவர் அருவருப்பர் அதுவே பட்டாம்பூச்சியின் பாதுகாப்பு வளையம்.
6. புரியாமல் கிடைக்கும் வெற்றிகளை விட புரிவதற்காக கிடைக்கும் தோல்வி மேலானது.
7. நல்ல மனங்களை ஒன்றோடு ஒன்று சேரும் வாழ்வு சுவாரசியம் ஆகும்.
8. உயிர் உன்னோடு இருக்கின்றது ஆனால் நீ உயிரோடு இல்லை இங்கு உயிரோடு இருப்பது என்பது வேறு உயிருடன் இருப்பது என்பது வேறு.